000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சத்தி நாயனார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கழற்சத்தி வரிஞ்சையார் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சோழ நாட்டில்அமைந்துள்ள வரிஞ்சையூர் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் சத்தி நாயனார் என்னும் சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே சடைமுடியுடைய விடையவர் திருவடியைச் சிந்தையில் இருத்தி வந்ததோடு சிவனடியார்கள் சேவடிகளையும் தமது சென்னி மீது தாங்கி வழிபட்டு வந்தார். சிவனடியார்களை எவரும் இகழாவண்ணம் காத்து வரும் பணியில் தம்மை அர்ப்பணித்தார். சத்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார். இத்தகைய வலிய மனமும் சக்தியும் வாய்க்கப் பெற்றமையால்தான் இவர் சத்தி நாயனார் என்று போற்றப் பெற்றார். இச்சிற்பத் தொகுதியில் நான்கு சிவனடியார்கள் கை குவித்து வணங்கிய நிலையில் நிற்கின்றனர். மூவர் வலது புறமும், ஒருவர் இடது புறமும் நிற்கின்றனர். இவர்களுக்கு நடுவே நிற்கும் ஒருவரின் நாக்கைக் குறடால் இழுத்துப் பிடித்தபடி வலது கையில் உள்ள கத்தியால் அரிய எத்தனிக்கிறார். அடியார்களின் தோற்றம் ஒரே மாதிரியாக காட்டப்பட்டுள்ளது. நீண்ட தொள்ளைக் காதுகளை உடையவர்களாய், கழுத்தில் சவடி போன்ற அணி அணிந்துள்ளனர். இடைக்கட்டுடன் கூடிய அரையாடை அணிந்துள்ளனர். அனைவர்க்கும் ஆடையின் முடிச்சுகள் பின்புறம் பக்கவாட்டில் காட்டப்பட்டுள்ளன. சத்தி நாயனார் பெரிய குந்தளம் வகை தலைக்கோலத்தைக் கொண்டுள்ளார். நீண்ட தொள்ளைக் காதுகள் உரையவாரயும், அரையாடை அணிந்தவராயும், கழுத்திலும், கைகளில் உருத்திராக்க மாலை விளங்குகின்றன. சிவனடியாரை இகழ்ந்தவரின் நாக்கை இடது கையில் உள்ள குறடால் இழுத்துப் பிடித்துள்ளார். வலது கையில் உள்ள கத்தியை ஓங்குகிறார். சிவ நிந்தனை செய்தவரும் சத்தி நாயனாரைப் போலவே ஆடையும், தலைக்கோலமும் கொண்டுள்ளார். |
653 | : | _ _ |a சத்தி நாயனார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000332 |
barcode | : | TVA_SCL_000332 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |